BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

header-ad

How Much Milk Should Baby Be Drinking? – Kalvikural.com

குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள்.
மேலும், ஒவ்வொரு வாரமும், மாதமும் என குழந்தை பிறந்த முதல் இருவருடம் வரை எலும்பு நல்ல வலிமையடை வேண்டும் எனில், பாலின் அவசியம் அறிந்து, சரியான அளவில் பாலூட்ட வேண்டும் என்றும் அறிவுரைக்கப்படுகிறது. அதைப்பற்றி இனிக் காண்போம்...
முதல் 3 மாதங்கள்
முதல் மூன்று மாதங்கள் 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 - 90 மில்லி என, ஒரு நாளுக்கு 8 - 12 முறை பாலூட்ட வேண்டும். ஓர் நாளுக்கு 250 - 700 மில்லி வரையிலான அளவு பாலூட்ட வேண்டும்.
3 வாரத்தில் இருந்து 3 மாதம் வரை
ஒரு நாளுக்கு 80 - 120 மில்லி அளவு பால், 6 - 8 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
3 - 6 மாதங்கள்
மூன்றாவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை, 120 - 240 மில்லி அளவிலான பால், 4 - 6 முறை ஓர் நாளுக்கு ஊட்ட வேண்டும். இதன் மூலம் ஓர் நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
6 - 9 மாதங்கள்
ஒரு நாளுக்கு 170 - 240 மில்லி அளவு பால், 6 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
9 - 12 மாதங்கள்
ஒரு நாளுக்கு 200 - 240 மில்லி அளவு பால், 3 - 5 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
12 + மாதங்கள்
ஒரு நாளுக்கு 120 மில்லி அளவு பால் / சோயா பால், தயிர் 4 முறை ஊட்டலாம்.
« PREV
NEXT »

Facebook Comments APPID